09 ஏப்ரல் 2026 : திரைப்பட தயாரிப்பு நிறுவனமான SMY Creations தயாரித்து வரும் Project 19 திரைப்படம் தற்போது போஸ்ட்-பிரொடக்ஷன் பணிகளின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஒவ்வொரு கூறும் மிகுந்த நுணுக்கத்துடன் செம்மைப்படுத்தப்பட்டு வருகிறது என தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
படத்தை SSY யோகா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ராட்னி ஸ்டீஃபன் மேற்கொண்டுள்ள நிலையில், எடிட்டிங்கையும் அவரே செய்துள்ளார். பின்னணி இசையை ஸ்டீபன் ஜோசப் அமைத்துள்ளார். மேலும், இறுதி ஒலி கலவை பணிகளை விக்னேஸ் சுப்பிரமணியம் (VKS) மேற்கொண்டுள்ளார்.
படத்தின் போஸ்டர் வெளியீடு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், விரைவில் திரைப்படம் வெளியாகும் எனவும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படம், வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.






