என் தமிழ்

SPM 2025: 10A பெற்ற அனைவருக்கும் மேட்ரிகுலேஷன் வாய்ப்பு – கல்வி அமைச்சகம்

கோலாலம்பூர், 09 ஏப்ரல் 2026 : 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வில் 10A மற்றும் அதற்கு மேற்பட்ட சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 6,717 தேர்வர்களுக்கும், 2026/2027 கல்வி அமர்விற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கல்வி அமைச்சு இடங்களை வழங்கும்.

இனம் மற்றும் பின்னணி பேதமின்றி, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தானியங்கி சேர்க்கை வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

“அதே நேரத்தில், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான 90 சதவீத பூமிபுத்ரா சேர்க்கை ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் அப்படியே உள்ளது,” என இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top