07 ஏப்ரல் 2026 : நாசாவின் ஆர்டெமிஸ்-II சந்திரப் பயணத்தில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்கள், சுமார் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பிறகு மீண்டும் நாசா கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்துள்ளனர்.
இந்த தொடர்பு துண்டிப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அல்ல; விண்கலம் சந்திரனின் மறுபுறம் சென்றபோது, சந்திரன் ரேடியோ அலைகளை மறைத்ததால் இயல்பாகவே ஏற்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.
பின்னர், விண்கலம் சந்திரனின் மறுபுறத்திலிருந்து வெளியேறியதும், ஹூஸ்டனில் உள்ள மிஷன் கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடர்பைப் பெற்றது. அந்த நேரத்தில், “மீண்டும் பூமியுடன் பேச முடிவது மகிழ்ச்சி” என விண்வெளி வீரர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, ஆர்டெமிஸ்-II குழு மனிதர்கள் இதுவரை சென்றிராத தூரத்தை எட்டியதாகவும், இது விண்வெளி ஆய்வில் முக்கிய சாதனையாக கருதப்படுகின்றது.
சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்த சந்திரப் பயணம், எதிர்காலத்தில் மனிதரை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் நாசாவின் திட்டங்களுக்கு முக்கிய முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.





