என் தமிழ்

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் குறித்து போலி தகவல் பரப்பு: 17 பேருக்கு எதிராக விசாரணை

சைபர்ஜெயா, 03 ஏப்ரல் 2026 : MCMC சமூக வலைதளங்களில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வு குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக சந்தேகிக்கப்படும் 17 நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இதுவரை 8 சந்தேக நபர்களின் வாக்குமூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் எரிபொருள் விலை உயர்வு குறித்த தவறான தகவல்களை சார்ந்தவை. அந்த 5 வழக்குகளில், 3 நபர்களின் வாக்குமூல்கள் முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 2 பேரின் வாக்குமூலங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன.

மேலும், மின்சார கட்டண உயர்வு தொடர்பாக 3 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனுடன், இன்னும் 9 சந்தேக நபர்கள் மீது கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.

இந்த வழக்குகள் Communications and Multimedia Act 1998 சட்டத்தின் பிரிவு 233ன் கீழ் விசாரிக்கப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் செயல்களை MCMC கடுமையாகக் கண்டித்துள்ளது. இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களிடையே அச்சமும் குழப்பமும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என MCMC எச்சரிக்கை விடுத்துள்ளது.

Scroll to Top