என் தமிழ்

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய ஈரான் மக்களுக்கு தடை

ஆஸ்திரேலியா, 27 மார்ச் 2026 : ஈரான் நாட்டவர்களுக்கு சுற்றுலா விசா மூலம் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதை 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்வதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, சுமார் 7,200 ஈரான் குடிமக்கள் சுற்றுலா விசாவிற்காக விண்ணப்பித்திருந்தனர்.

தற்போதைய போர்ப் பதற்றம் மற்றும் நிலையற்ற சூழ்நிலையால், சுற்றுலா விசாவில் வரும் சிலர் தங்கள் நாட்டிற்கு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிடக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 6 மாதங்களுக்கு ஈரான் நாட்டவர்களுக்கு புதிய சுற்றுலா விசா வழங்கப்படாது. எனினும், ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரான் குடிமக்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Scroll to Top