26 மார்ச் 2026 : 8வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றுள்ளன.
‘ஏ’ பிரிவில் நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலைப் பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில், 4 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மாலை 4.15 மணிக்கு தொடங்க உள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி தனது தொடக்கப் போட்டியில் வங்காளதேசத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.





