மும்பை, 26 மார்ச் 2026 : பாலிவுட் இயக்குநர் Aditya Dhar இயக்கத்தில், ஆதித்யா தார், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கன்னா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பரில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் பரபரப்பான கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடைய இந்த திரைப்படம், அதிரடி திருப்பங்களும் உணர்ச்சி மிக்க காட்சிகளும் நிறைந்ததாக உள்ளது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.





