என் தமிழ்

“இந்த முறை 6வது கோப்பை நிச்சயம்” – ரசிகர்களுக்கு ரோகித் சர்மா நம்பிக்கை

மும்பை, 22 மார்ச் 2026 : ஐபிஎல் 19வது சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா உறுதி அளித்துள்ளார்.

இந்த தொடருக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை அணி சார்பில் ‘MI Mix’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் ரோகித் சர்மாவும் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் ரசிகர்களை சந்தித்த ரோகித் சர்மா, “உங்களுக்காக நிச்சயமாக 6வது கோப்பையை வெல்ல முயற்சிப்போம்” என்று உறுதி அளித்தார். அவரது இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையில் ஏற்கனவே 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், வரவிருக்கும் சீசனிலும் அதே சாதனையை தொடர ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மார்ச் 28ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில், மும்பை அணி வலுவான அணியாக களமிறங்கும் நிலையில், இந்த முறை 6வது கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் அணியினர் தயாராகி வருகின்றனர்.

Scroll to Top