என் தமிழ்

எப்.பி.ஐ முன்னாள் தலைவர் மறைவு: டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்து

அமெரிக்கா, 22 மார்ச் 2026 : அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் முன்னாள் தலைவராக ராபர்ட் முல்லர் III பணியாற்றினார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, எப்.பி.ஐயை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்பாகவும் முல்லர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதன் பின்னணியில், முல்லர் மீது டிரம்ப் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், 81 வயதான ராபர்ட் முல்லர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “ராபர்ட் முல்லர் தற்போது இறந்துள்ளார். அவர் இறந்தது நல்லதே; இனி அப்பாவி மக்களுக்கு சேதம் விளைவிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு எப்.பி.ஐ தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.

Scroll to Top