என் தமிழ்

பெரிக்காத்தான் நேஷனலில் MIPP-க்கு முக்கிய பொறுப்புகள் – எஸ்.பி. புனிதன் நன்றி

கோலாலம்பூர், 21 மார்ச் 2026 : மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP)க்கு பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைமை அமைப்பில் வழங்கப்பட்டுள்ள மூன்று முக்கிய பொறுப்புகளுக்காக எஸ்.பி. புனிதன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த நியமனங்கள், குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் MIPP-க்கும் கூட்டணியில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமை பொறுப்பை தமக்கு வழங்கிய பெரியகாத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாம்சுரி மொக்தாருக்கு அவர் தனிப்பட்ட நன்றியை தெரிவித்தார். பல்வேறு இன, மத, பின்னணியைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த இந்த பொறுப்பு முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, MIPP பிரதிநிதி டத்தோ சிவகுமார் கிருஷ்ணன், பெரியகாத்தான் நேஷனலின் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்காகவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், MIPP-இன் இன்னொரு பிரதிநிதி உயர்மட்ட குழுவில் சேர்க்கப்பட்டதன் மூலம், தற்போது அந்த குழுவில் MIPP சார்பில் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.

இது MIPP-க்கு வழங்கப்பட்ட முக்கிய அங்கீகாரமாகும் என்றும், அனைத்து இனங்களின் பங்களிப்பையும் உறுதி செய்யும் பெரியகாத்தான் நேஷனலின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மலேசிய மக்களின் நலனுக்காகவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் MIPP தொடர்ந்து செயல்படும் என்றும் எஸ்.பி. புனிதன் தெரிவித்தார்.

Scroll to Top