மும்பை, 17 மார்ச் 2026 : 10 அணிகள் பங்கேற்கும் 19-வது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான Rohit Sharma தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகளை மும்பை இந்தியன்ஸ் அணி தனது சமூக வலைதளமான X தளத்தில் வெளியிட்டுள்ளது.
வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 29-ஆம் தேதி கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்காக வீரர்கள் முழு தயாரிப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.




