என் தமிழ்

நாடு முழுவதும் 12 ஆயிரம் இடங்களில் எல்பிஜி சிலிண்டர் சோதனை நடத்தப்பட்டது

டெல்லி, 17 மார்ச் 2026 : ஈரான்–இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா முழுவதும் எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதையடுத்து மத்திய பெட்ரோலியத்துறை நாடு முழுவதும் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த சோதனைகளில், சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், விதிமுறைகளை மீறிய கேஸ் ஏஜென்சிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சுமார் 12,000 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம் மொத்தம் 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 600 சிலிண்டர்களும், மேற்கு வங்காளத்தில் 450 சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கேரளாவில் மட்டும் சுமார் 1,000 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவிற்கு எல்.பி.ஜி. எரிவாயு கொண்டு வந்த இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதனால் சிலிண்டர் தட்டுப்பாடு இனி படிப்படியாக குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.

Scroll to Top