என் தமிழ்

பிரிக்ஃபீல்ட்ஸில் ஹரேகிருஷ்ணா ஆண்கள் ஆடைக்கடையின் 6-வது கிளை திறப்பு

கோலாலம்பூர், 14 மார்ச் 2026 : கோலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் ஹரேகிருஷ்ணா மேன்ஸ் சாய்ஸ்’ ஆடைக்கடையின் ஆறாவது கிளை மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற விழாவில் சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த புதிய கிளையை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஹரேகிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான பல்வேறு வகையான ஆடைகள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய தயாரிப்புகள் இக்கிளையில் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு புதிய கிளை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சி யூடியூப் தளத்தின் மூலம் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது.

Scroll to Top