12 மார்ச் 2026 : நாட்டின் புகழ்பெற்ற நடிகர் தோக்கோ சத்தியா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து, துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி அவர்களின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
துணை பிரதமரின் தனிப்பட்ட உதவியாளர் (PA) அர்வின் அப்பளசாமி இந்த உதவியை வழங்கி, தோக்கோ சத்தியாவின் உடல்நிலையைப் பற்றி விசாரித்தார்.
மேலும், தோக்கோ சத்தியா விரைவில் குணமடைந்து மீண்டும் கலைத்துறையில் தனது சேவையைத் தொடர வேண்டும் என துணை பிரதமர் தனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தோக்கோ சத்தியாவின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.




