என் தமிழ்

31.2 கோடி பார்வைகள்: டிரெய்லர் வியூசில் சாதனை படைத்த ‘துரந்தர்-2’

11 மார்ச் 2026 : நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாகும் முன்பே அதன் டிரெய்லர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துரந்தர்’ படத்தின் தொடர்ச்சியாக ‘துரந்தர் – ரிவெஞ்ச்’ என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெறும் 48 மணி நேரத்துக்குள் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 31.2 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும், 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் தளத்தின் டிரெண்டிங் பட்டியலிலும் இந்த டிரெய்லர் இடம்பிடித்துள்ளது.

‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Scroll to Top