என் தமிழ்

‘வீர கருப்பு’ திரைப்படத்தின் கிராண்ட் பிரிமியர் – ஷா ஆலத்தில் சிறப்பாக நடைபெற்றது

ஷா ஆலம்ஸ், 03 மார்ச் 2026: தமிழ் திரைப்படமான ‘வீர கருப்பு’ திரைப்படத்தின் கிராண்ட் பிரிமியர் நிகழ்ச்சி மார்ச் 3 ஆம் தேதி மலேசியாவின் ஷா ஆலத்தில் உள்ள TSR Cinemax திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் தனேஷ் பெர்ராபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் காஷ் வில்லான்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

காஷ் வில்லான்ஸ் புரொடக்ஷன் மற்றும் சாய் நந்தினி மூவி வேர்ல்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு ஆக்ஷன் மற்றும் சமூக அம்சங்களை கொண்ட இந்த திரைப்படம், வரும் மார்ச் 5, 2026 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் ‘வீர கருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to Top