கோலாலம்பூர், 05 மார்ச் 2026 : மலேசிய தமிழர்களின் முகவரியாகவும், முடி சூடா மன்னனாகவும் போற்றப்பட்ட முன்னாள் அரசியல்வாதி துன் சாமிவேலுவின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வின் வாயிலாக துன் சாமிவேலுவுடன் தொடர்புடைய மறக்க முடியாத நினைவுகள், அனுபவங்கள் மற்றும் அவருடைய சேவையைப் பற்றிய நினைவலைகளை பொதுமக்கள் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய சமூகத்திற்காக நீண்ட காலம் சேவை செய்த துன் சாமிவேலுவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவருடன் இணைந்திருந்தவர்கள், அவரிடம் உதவி பெற்றவர்கள் மற்றும் அவரை மதிக்கும் அனைவரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ள வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அவரது சேவைகளை போற்றியும், அவரது பாரம்பரியத்தை கொண்டாடியும், துன் சாமிவேலுவின் வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ள அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.






