04 மார்ச் 2026 : இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் பல பகுதிகளில் நடத்திய கடுமையான வான்வழி தாக்குதல்களில், 181 குழந்தைகள் உட்பட மொத்தம் 1,097 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்–அமெரிக்கா தாக்குதலை ஈரான் கடுமையாக கண்டித்து, இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.





