என் தமிழ்

ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; 31 பேர் பலி

டெல் அவிவ், 02 மார்ச் 2026 : ஈரான் மீது அமெரிக்கா மற்றும் Israel இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Ayatollah Ali Khamenei மற்றும் அவரது குடும்பத்தினரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை ஈரான் தரப்பும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடக்க கட்ட தாக்குதலிலேயே 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக Israel Defense Forces தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், லெபனானில் இருந்து Hezbollah அமைப்பு இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் மேற்கொண்டது. இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததாகவும், 149 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தெற்கு லெபனானை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து, போர் சூழ்நிலை நீடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Scroll to Top