என் தமிழ்

ஆப்கானிஸ்தான் மீது வான்வழியே பாகிஸ்தான் விமான படை தாக்குதல்

காபூல், 22 பிப்ரவரி 2026 : ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை குறிவைத்து Pakistan விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக Afghanistan நாட்டின் பக்திகா மாகாணத்தில் உள்ள பெர்மால் மற்றும் ஆர்குன் மாவட்டங்கள் மீது பாகிஸ்தான் விமானங்கள் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்திகா மாகாணத்தில் மதபயிற்சி அளிக்கும் கல்வி நிலையம் ஒன்றும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நங்கர்ஹார் மாகாணத்தில் கோகியானி பாசோத் மற்றும் கானி கேல் மாவட்டங்களின் மீதும் பாகிஸ்தானிய போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலை பாகிஸ்தானில் வெளியாகும் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரமலான் மாதத்தில் சமீபத்தில் Islamabad, Bajaur மற்றும் Bannu நகரங்களில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு பதிலடியாக துல்லியமான விமானத் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பித்னா அல் குவாரிஜ்’ மற்றும் அதன் கிளை அமைப்புகள், குறிப்பாக Islamic State – Khorasan Province (டேயிஷ் கோரசான் புரோவின்ஸ்) உள்ளிட்ட அமைப்புகளின் 7 முகாம்கள் மற்றும் பதுங்கு தளங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

Scroll to Top