16 பிப்ரவரி 2026 : ஏ.ஐ. துறையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் (Startups), கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்கள் ஆகியோர் ஒரே மேடையில் ஒன்றிணையும் சிறப்பான நிகழ்வாக இது அமையும்.





