என் தமிழ்

மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு-இணைய சேவை துண்டிப்பு

இம்பால்,11 பிப்ரவரி 2026 : மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டாக அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி முதல்-மந்திரி கெம்சந்த் சிங் தலைமையில் மீண்டும் அரசு அமைக்கப்பட்டது. அமைச்சரவையில் குகி மற்றும் நாகா இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு துணை முதல்-மந்திரி பதவிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி இனத்தவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், நாகா இனத்தவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று மணிப்பூரில் கலவரம் உச்சத்தை எட்டியது. குகி இனத்தவர்கள் அதிகமாக வசிக்கும் உக்ரூல் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளும், சில அரசு அலுவலகங்களும் மர்மநபர்களால் தீவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஊரடங்கு அமல்படுத்தியதுடன், இணைய சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Scroll to Top