புத்ராஜெயா, 6 பிப்ரவரி 2026 – இந்திய மலேசிய சமூக மாற்ற அலகு (MITRA), மலேசியா–சீனா இளைஞர் TVET பயிற்சி திட்டம் (Malaysia-China Youth TVET Training) மூலம், தொழில்நுட்ப மற்றும் தொழில்வாய்ப்பு கல்வி பயிற்சி (TVET) துறையில் சர்வதேச ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த முயற்சி, நாட்டின் திறன் வளர்ச்சிக்கும் மனித வள மேம்பாட்டிற்கும் முக்கிய அடித்தளமாக விளங்குகிறது.
இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் RM2.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டு, 2024 முதல் பெர்துபுஹான் கெபாங்க்சான் பெக்கர்ஜா பெர்கெமாஹிரான் (Belia Mahir) அமைப்புடன் இணைந்து பயிற்சி நடைமுறை மற்றும் பங்கேற்பாளர் தேர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த திட்டம், குறிப்பாக B40 மற்றும் M40 பிரிவுகளைச் சேர்ந்த இந்திய சமூக TVET இளைஞர்களுக்கு, சர்வதேச தொழில்துறை பயிற்சிகளில் பங்கேற்கவும், உலகத் தரத்திலான திறன் அங்கீகாரத்தைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது.
Malaysia–China Youth TVET 1.0 திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டில் 500 பங்கேற்பாளர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். MITRA நிதி ஆதரவுடன் இந்த திட்டம் 2025 முழுவதும் தொடரப்பட்டது.
பங்கேற்பாளர்கள் சீனாவில் தொழில்துறை பயிற்சியை நிறைவு செய்ததன் மூலம், உலகளாவிய தொழில்துறை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி முறைகள், தொழில்நுட்ப திறன்களையும் TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறனையும் மேம்படுத்துவதில் மிகுந்த பயன் அளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட Malaysia–China Youth TVET 2.0 திட்டம், 2026 முழுவதும் தொடரப்படுவதுடன், அதிகமான இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம், சர்வதேச அளவில் போட்டித்திறன் கொண்ட திறமையான தொழிலாளர் படை உருவாக்கப்படும். பங்கேற்பாளர்கள் இரண்டு வாரங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
சீனாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட TVET நிறுவனங்களில் பங்கேற்பாளர்கள் பயிற்சி பெறுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட மாட்யூலர் மைக்ரோ-சான்றிதழ்கள் (micro-credential) வழங்கப்படும்.
மேலும், வாழ்வுச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் பயிற்சி உதவித்தொகை (elaun) வழங்கப்படுவதுடன், அனைவருக்கும் சமவாய்ப்புள்ள உலகத் தர திறன் பயிற்சியை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள பயிற்சி நிறுவனங்களின் கொள்ளளவைப் பொருத்து, பங்கேற்பாளர்களின் அனுப்புதல் கட்டங்களாக (berfasa) மேற்கொள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள், பயணத்திற்கு முன் தேவையான முழுமையான தயாரிப்புகளை உறுதிசெய்ய Belia Mahir Malaysia மூலம் அறிவிக்கப்படுவார்கள்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 பிப்ரவரி 2026. தகுதி நிபந்தனைகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளம் www.mitra.gov.my-ஐப் பார்வையிடலாம்.
Malaysia–China Youth TVET Training திட்டம் (2025/2026) தொடர்பான கேள்விகளுக்கு, வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 03-8886 6221 / 6002 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது, ktk_sushmita@mitra.gov.my / malini@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.






