ம இ கா இளைஞர் பிரிவு சார்பாக B. தனசேகரனுக்கான நன்கொடை இயக்கம் ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C.சிவராஜ் அவர்களால் 27/08/2014 அன்று துவங்கி வைக்கப்பட்டது. டக்சென்னி தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 9 வயதான B.தனசேகரனின் மருத்துவ செலவுக்காக நிதி திரட்டுவதை தலைவர் திரு.C.சிவராஜ் 27/08/2014 அன்று துவங்கி வைத்தார். இந்தியாவில் சிகிச்சை பெற அவருக்கு RM 70,000 தேவை படுகிறது. பொது மக்களும் நண்பர்களும் இந்த இச்சிறுவனின் மருத்துவ செலவிற்கு நிதி வழங்க திரு. சிவராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
நேரடியாக தனசேகரனுக்கு நிதி அளிக்க CIMB கணக்கு எண் : 705560949 என்ற கணக்கில் பணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ம இ கா இளைஞர் பிரிவு செயலாளர் திரு. அரவிந்தன் அவர்களை 019-4011881 என்ற எண்ணிலோ அல்லது ம இ கா இளைஞர் பிரிவு தலைமை கழகத்தை சேந்த திரு. தியாகசீலனை 03-40431111 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.