என் தமிழ்

ஆஸ்திரேலியாவின் புதிய அறிக்கை – எம்எச் 370 பயணிகள் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம்.

mh370

கடந்த வியாழனன்று ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்ட புதிய அறிக்கையில் எம்எச் 370இன் பயணிகளும் பணியாளர்களும் மூச்சுத் திணறலால் மரணமுற்றிருக்கலாம் என்பதுடன் தன்னியக்க முறையில் சென்ற விமானப் பயணிகள் உயிரற்ற நிலையில் கடலினுள் மூழ்கிருக்கலாம் என கூறுகிறது.
அந்த 55 பக்க அறிக்கை குறித்து ஆஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கருத்து வெளியிட்டது. முந்திய பேரிடர்களுடன் சம்பந்தப்பட்ட விமானத்தை ஒப்பிட்ட பிறகு புலனாய்வாளார்கள் அந்த முடிவுக்கு வந்துள்ளனர் என அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட விமானத்தின் உள்ளிருந்து புதிய ஆதாரம் எதையும் இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை.

Scroll to Top