என் தமிழ்

ஜொகூர் மாநில பள்ளிகளில் இருந்து திருவள்ளுவர் சிலைகள் அகற்றும் உத்தரவு : மலேசிய இந்துதர்ம மாமன்றம் கண்டனம்

கோலாலம்பூர், 02 டிசம்பர் 2025 : தமிழ்ப்பள்ளிகளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை அகற்றும் ஜொகூர் கல்வி இலாகாவின் உத்தரவை மலேசிய இந்துதர்ம மாமன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து கண்டன அறிக்கையை மாமன்றம் 01 டிசம்பர் 2025 அன்று வெளியிட்டது.

திருவள்ளுவர் தமிழரின் நூல் மரபையும், ஒழுக்க நெறிகளையும் கொண்டாடும் பெருமதிப்பிற்குரிய சான்றோன்.

இந்த முடிவு இந்தியர்களின் பண்பாட்டு அடையாளத்திற்கும் மரபிற்கும் எதிரானது.

இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறோம்.

Scroll to Top