நஸ்ரியா-பஹத் பாசில் திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து

நஸ்ரியா-பஹத் பாசில் திருமண வரவேற்பு: நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து

Fahad

ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நஸ்ரியா. கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் ‘எல் பார் லவ்’ என்ற படத்தில் நடித்தபோது இவருக்கும், அந்த படத்தின் நாயகன் பஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. பஹத் பாசில் பிரபல டைரக்டர் பாசிலின் மகன் ஆவார்.

பஹத் பாசில்– நஸ்ரியா காதலை இருவருடைய பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 21–ந் தேதி திருவனந்தபுரத்தில் அவர்களது திருமணம் நடந்தது. இதில் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன்பின் நேற்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலப்புழாவில் நடந்தது. நஸ்ரியா விசேஷ அலங்காரத்துடன் கணவர் பஹத் பாசிலுடன் காரில் வந்து இறங்கினார். அவர்களை உறவினர்கள் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

விழாவில் நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள், மந்திரிகள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். கேரள உள்துறை மந்திரி ரமேஷ்சென்னிதலா, எம்.கே. முனீர், முன்னாள் மத்திய மந்திரி வயலார் ரவி, கே.சி.வேணுகோபால் எம்.பி, நடிகர்கள் மம்முட்டி, மனோஜ் கே.விஜயன், ஜனார்த்தனன், சுதீஷ், கிருஷ்ணபிரசாத், நடிகைகள் நதியா, ரீமா கல்லிங்கல், கீதுமோகன்தாஸ், பூர்ணிமா இந்திரஜித், பாடகி சுஜாதா, மலையாள டைரக்டர்கள் சிபி மேத்யூ, ரெஞ்சி பணிக்கர், செஞ்சுரி ராஜீவ் மாத்யூ, மேஜர் ரவி, கேரள பிலிம் சேம்பர் தலைவர் நந்தகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.