திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, குஜராத், அசாம், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று கோவிலில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சி அளித்தது. தங்கும் விடுதியில் இடம் கிடைக்காதவர்கள் பூங்காக்களிலும், சாலைகளிலும், கோவில் வளாகத்திலும் ஆங்காங்கே உள்ளனர்.
கோவிலில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் அதற்கு வெளியே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் இலவச தரிசனத்துக்கு 22 மணி நேரமும், திவ்ய தரிசன கியூ வரிசையில் பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்ததால் தரிசனத்திற்கு 11 மணி நேரமும், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்திற்கு 9 மணி நேரமும் ஆகிறது.
இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.