இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இலங்கை அரசுக்கும், முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் எம்.பி.க்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர். தமிழர் பகுதிகளில் அதிகரித்து வரும் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியாதாகவும் தெரிகிறது. 13வது பிரிவில் கூறியுள்ளபடி காவல்துறை அதிகாரத்தையும், தமிழர் நில உரிமையையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எம்.பி.க்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்த தமிழ் எம்.பி.க்கள் குழு இதே பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.