என் தமிழ்

தீபாவளி கொண்டாட்டம் ஒற்றுமையின் ஒளிக்கதிராக இருக்கும் என்றும், அநீதியை விரட்டும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், 19 அக்டோபர் 2025 : நாளை தீபாவளி கொண்டாடும் மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது செளமட் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டம் முழு சமூகத்திற்கும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுவரும் என்றும், இருளையும் ஒடுக்குமுறையையும் அகற்றும் ஞானத்தின் அடையாளமாக இது இருக்கும் என்றும் அவர் தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்தார்.

“எனது நண்பர்கள், இந்திய சமூகத்தினர் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

“இருளையும் அடக்குமுறையையும் விட்டுவிட்டு முன்னேற்றம், ஞானம் மற்றும் நீதியை நோக்கி நாம் ஒன்றிணைவோம்” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் மலேசியாவில் உள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை வலுப்படுத்தும் ஒரு தளமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“தீபாவளி அனைத்து மலேசிய குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஞானத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

‘தீபங்களின் பண்டிகை’ என்றும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் நாளை கொண்டாடப்படும்.

Scroll to Top