உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான MH17 விமான விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்ட 20 மலேசியர்களின் உடல்கள் இன்று தாய்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து இன்று தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நடு முழுதும் தேசிய கொடி இன்று அரைக் கம்பத்தில் பறக்கப்விடப்படும். இன்று நடப்பதாக இருந்த அனைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இன்று மங்கலான நிறத்திலே ஆடை உடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு மரியாதை செலித்தும் வகையிலும் நமது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இன்று நாடு முழுதும் சரியாக காலை 10.45 மணிக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.