என் தமிழ்

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு பேரவை சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், 07 அக்டோபர் 2025 : மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு பேரவை இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத் தலைவர் ஜே. கோவிந்தசாமி@சுரேஷ் தெரிவித்ததாவது, தற்போதைய உணவகத் துறையில் சுமார் 8,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றும், தொழிலாளர் பற்றாக்குறையால் பல உணவகங்கள் செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன், மூலப்பொருட்களின் விலை அதிகரித்திருப்பது உணவகத் துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், இதை சமாளிக்க அரசு உதவி மற்றும் தலையீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் சேர்வதை வரவேற்கிறோம் என்றும், நாட்டில் 4,000-க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் இன்னும் சங்கத்தில் உறுப்பினராகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேரவை, சங்கம் 25 ஆண்டுகளாக உணவகத் துறையில் வழங்கி வரும் அர்ப்பணிப்பையும் சேவைகளையும் நினைவுகூரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Scroll to Top