என் தமிழ்

மின்னல் எஃஎம் – ‘மனசு நிறையட்டும்’ தீபாவளி 2025 கொண்டாட்டம்

கோலாலம்பூர், 07 அக்டோபர் 2025 : இந்தாண்டு தீபாவளி பண்டிகையை மின்னல் எஃஎம் “மனசு நிறையட்டும்” என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது. இதன் பொருள் “இதயம் மகிழ்ச்சியால் நிறையட்டும்” என்பதாகும். இந்தத் தலைப்பு, தீபாவளியின் ஒளி வீடுகளை மட்டும் அல்லாமல், ஒவ்வொரு இதயத்தையும் பாசம், மகிழ்ச்சி, மற்றும் ஒற்றுமையால் ஒளிரச் செய்யும் என்ற நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, மின்னல் எஃஎம் ‘லிம்பாகன் சஹாயா’ (Limpahan Cahaya) எனும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இது பல இன மக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடும், கலாச்சார அழகை போற்றும், மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய தளமாகும்.

சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, மின்னல் எஃஎம் இந்த ஆண்டில் 20 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் பிந்தாங் மின்னல் (BINTANG MINNAL) வெற்றியாளர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

அத்துடன், தீபாவளி சிறப்பை முன்னிட்டு மின்னல் எஃஎம் வானொலி வழியாக பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.

காலை நேர நிகழ்ச்சி ‘காலை கதிர் (Kaalai Kathir)’ தீபாவளியை மையப்படுத்திய பல சுவாரசியமான தலைப்புகளை முன்வைக்கும்.

‘உல்லாசம் உற்சாகம் (Ullasam Urchagam)’ எனும் மதிய நேர நிகழ்ச்சியில், ஜெயிக்கிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் தீபாவளி வினாடி வினா நிகழ்ச்சி இடம்பெறும்.

முக்கிய அம்சமாக, ‘தாளம் (Thaalam)’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெறும். இதில் BINTANG MINNAL 2025 இறுதி போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும், தீபாவளி சிறப்பு சிறுகதை மற்றும் நாடகங்களும் ஒளிபரப்பப்படும்.

இந்த முயற்சி, மின்னல் எஃஎம் வெறும் பொழுதுபோக்கு நிலையம் அல்லாமல், மக்களை இணைக்கும் மற்றும் நல்லெண்ணத்தைப் பரப்பும் ஒரு ஊடகமாக திகழ்வதை வெளிப்படுத்துகிறது.

தீபாவளி 2025–இல் மின்னல் எஃஎம்-ன் ஒளியுடன் மகிழ்ச்சி பரவட்டும்!

Scroll to Top