கோலாலம்பூர், 07 அக்டோபர் 2025 : கெல்லி ஃபைன் ஆர்ட்ஸின் 12வது பரதநாட்டிய சலங்கை பூஜை “த்வாதசா நாட்டியாஞ்சலி” – சிறப்பான பாரம்பரிய நடன விழாவை அக்டோபர் 05, 2025 அன்று கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், சாந்தானந்த் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கெல்லி ஃபைன் ஆர்ட்ஸ் மாணவியர்கள் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கலை நயம் மிக்க பாரதநாட்டிய நிகழ்ச்சிகளால் அனைவரையும் கவர்ந்தனர்.
நாட்டிய திலகம் குரு ஸ்ரீமதி கெல்லி விக்னேஷ் ஹரன் P.P.C அவர்களின் மாணவர்களான தன்யா சதீஷ்குமார், கீர்த்தனா ஸ்ரீ வேணுகோபால், தரினா தனபாலன், மீராஷ்ரியே முனியாண்டி, ஜனனி சில்வா ராஜன், ஜீவனேஷ்ரீ சுரேஷ், அமிர்தா மீனா குமரன், காவினா தனபாலன், காவ்யா கணேசன், சுவாதி மேனன் யோகநாதன், சுசிதா ரவீந்திரன் மற்றும் கங்கலேஷ்ரீ சுரேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடினார்கள்.
முன்னதாக இந்த மாணவியர் அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி சலங்கை அணிவித்தல் நடைபெற்றது.
















