சுங்கை பட்டாணி, 01 அக்டோபர் 2025 : கெடா சுங்கை பட்டாணியில் உள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் “பள்ளி அளவிலான சரஸ்வதி பூஜை” 01 அக்டோபர் அக்டோபர் 2025 புதன்கிழமை பள்ளி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
மந்திரங்கள் ஓத யாக பூஜை நடைபெற்றது. கொலு வைக்கப்பட்டு அதற்கும் பூஜை நடைபெற்றது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றவர்கள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பூஜையில் பூஜைக்கு பிறகு உணவு வழங்கப்பட்டது. சரஸ்வதி பூஜைக்கு உணவுகள் வழங்கிய ‘முத்தையாஸ் கேஷ் & கேரி’, திரு.வாசுதேவன் குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
Source : SJKT Saraswathy Kedah FB











