என் தமிழ்

என் கணவர் இமேஜை கெடுக்க சதி: குஷ்பு கோபம்

Kushboo
சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மணை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் முழுமைபெறாத, தயாரிப்பில் இருந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. இதில் சவுண்ட் சரியில்லை, கலர் கரெக்ஷன் எதுவும் செய்யில்லை.
இதைப் பார்த்த குஷ்பு அதிர்ச்சி அடைந்து கணவர் சுந்தர்.சிக்கும் தயாரிப்பாளர் கார்திக் தினேசுக்கும் போன் செய்து கேட்டார். அவர்கள் தங்களுக்கு தெரியவில்லை என்றிருக்கிறார்கள். “படத்தின் விளம்பர பிரிவில் இருக்கும் யாரோதான் இதைச் செய்திருக்கிறார்கள். என் கணவர் இமேஜை கெடுக்க யாரோ திட்டமிட்டு இதனை செய்திருக்கிறார்கள். சுந்தர் இரவும் பகலும் வேலை பார்த்து படத்தை செதுக்கி வருகிறார். ஒரு சிலர் அதனை இப்படி கெடுத்து வருகிறார்கள்” என்ற தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் குஷ்பு.
Scroll to Top