சுபாங் ஜெயா, 30 செப்டம்பர் 2025 : சுகம் கர்நாடிகா ஏற்பாட்டில் 30 செப்டம்பர் 2025 அன்று மாலை 07.00 அளவில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை பக்தி சிரத்தையுடன் கலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
சுகம் சுவார பக்ஸில் நடைபெற்ற நிகழ்வில் குமாரி சுவேதா சரன் சரவணன் பரதநாட்டியம், ஸ்ரீ விஜயகுமார் பாலசந்த் வாய்ப்பாட்டு, ஸ்ரீ Dr. பிரஜிந்திரா சங்கர் கிருஷ்ணன் சிதார், குமாரி Dr. ஸ்ரீ வர்ஷினி உமா சங்கர் மோகினி ஆட்டம், ஸ்ரீ குகன் கனேசலிங்கம் வீணை மற்றும் ஸ்ரீமதி சுபத்ரா ஜெயசீலன் வாய்ப்பாட்டு ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.







