என் தமிழ்

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்

சென்னை[இந்தியா], 30 செப்டம்பர் 2025 : சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : DailyThanthi

Scroll to Top