பிரதமர் அறிவித்த கழிவறை திட்டம்: குவிகிறது நிதி

பிரதமர் அறிவித்த கழிவறை திட்டம்: குவிகிறது நிதி

narendra-modi--2013_350_081514102153

நாட்டில் உள்ள பள்ளிகளில் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்று பெருநிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்த நான்கு நாட்களில் டாடா கன்சல்டன்சியும், பாரதி அறக்கட்டளையும் இணைந்து 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன.

பிரதமரின் தனது சுதந்திர தின உரையின் போது இந்த அழைப்பை விடுத்த நிலையில், முதன் முதலாக அன்றைய தினமே ஓரியண்டல் வர்த்தக வங்கி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு தனித்தனியாக 200 கழிவறைகள் கட்ட 2 கோடி ரூபாயை வழங்கியது. இதையடுத்து டாடா நிறுவனம் தற்போது 10000 பள்ளிகளில் கழிவறை கட்ட 100 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக கூறியுள்ளது.

அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பெண் மாணவிகளுக்கான சுகாதாரமான கழிவறை வசதி செய்து தருவதன் மூலம் கல்வியில் அவர்கள் முன்னேற வாய்ப்புள்ளதை கருதி இந்த நிதியுதவியை வழங்குவதாக டாடா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதே போல் பாரதி நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரதி அறக்கட்டளை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்காக தத்தெடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது. அங்குள்ள பள்ளிகளில் கழிவறை கட்டுவதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக பாரதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.