பாலியல் வன்முறைகளை ஆராயும் காதல் 2014

பாலியல் வன்முறைகளை ஆராயும் காதல் 2014

DSC_04961

இன்றைய காலகட்டத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பது காதல் களியாட்டங்கள் பெருகிவிட்டதால்தான் என்பதை அடித்துச் சொல்லும் படமாக தயாராகி இருக்கிறது காதல் 2014 என்ற படம்.

மாத்தியோசி, முத்துக்கு முத்தாக படங்களில் நடித்த ஹரிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். சினேகாவின் முகச் சாயல் கொண்ட நேகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். பாய்ஸ் மணி கண்டன் வில்லனாக நடித்திருக்கிறார். அப்புக்குட்டி காமெடி செய்கிறார். வருகிற 29ந் தேதி படம் ரிலீசாகிறது.

“நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்முறைகள் பெருகி விட்டது. காரணம் காதல்தான். டில்லியில் நள்ளிரவு ஒரு பஸ்சில் காதலன் கண் முன் காதலி கற்பழிக்கப்படுகிறாள். 12 மணிக்கு நள்ளிரவில் காதலர்களுக்கு என்ன சார் வேலை.

கிழக்கு கடற்கரை சாலை சவுக்கு காட்டுக்குள், பீச்சின் ஒதுக்குபுறமான இடத்துக்குள், நெடுஞ்சாலைகள், தனி வீடுகள் இப்படி எங்கெங்கும் பாலியல் வன்முறைகள். காரணம் காதலர்களின் அத்து மீறல்கள்.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் நேகாவை ஒரு காட்டுக்குள் காதல் செய்ய அழைத்து செல்கிறார். காதலிக்க நடுக்காடுதான் வேண்டுமா. அவரது நோக்கம் அங்கு வைத்து அவரை அடைந்து விட முடியதா என்பதுதான். ஆனால் அங்கு வந்த பாய்ஸ் மணிகண்டன் தலைமையிலான கும்பல் கேங் ரேப் செய்து விடுகிறது. குற்ற உணர்ச்சியால் ஹீரோ துடிக்கிறான்.

மனமும், உடலும் வலிக்க ஹீரோயின் துடிக்கிறார் இறுதியில் என்ன தீர்வு என்பது கதை. இப்படிப்பட்ட நல்ல கதைக்கு, வன்முறையோ ஆபாசமோ இல்லாத கதைக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. என்கிறார் இயக்குனர் சுகந்தன்.