அனுஷ்கா, திரிஷாவுக்காக கறுப்பு டைக்கும், வெள்ளை நிற தலை முடிக்கும் மாறி நடிக்கிறார் அஜீத். விஜய் நடிக்கும் ‘கத்தி‘, விக்ரம் நடிக்கும் ஐ, விஷால் நடிக்கும் பூஜை ஆகிய 3 படங்கள் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் பரிசாக லிங்கா ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அஜீத், பொங்கல் விருந்தாக தனது ரசிகர்களுக்கு விருந்து படைக்க புதிய படத்துடன் வருகிறார். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்துக்கு பெயரிடும் வேலை இன்னும் நிறைவுபெறாவிட்டாலும் பட ஷூட்டிங் படுவேகமாக நடக்கிறது.
அனுஷ்கா முதன்முறையாக இப்படத்தில் அஜீத்துடன் ஜோடி போடுகிறார். அவருடன் நடிக்கும் காட்சிகளில் பெப்பர் சால்ட் தோற்றத்தில் அதாவது கறுப்பு வெள்ளை நிற தலைமுடியுடன் தோன்றுகிறார். இதே படத்தில் திரிஷாவும் ஜோடியாக நடிக்கிறார். பிளாஷ்பேக் காட்சியாக வரும் இந்த சீன்களில் 25 வாலிபன் தோற்றத்துக்கு அஜீத் மாறி நடிக்கிறார். இதற்காக வழக்கமான பெப்பர் சால்ட் நிற தலை முடிக்கு கறுப்பு நிற டை அடித்து இளமை பொலிவுடன் காதல் கோட்டை அஜீத் தோற்றத்துக்கு மாறி நடிக்கிறார்.
அனுஷ்கா, திரிஷாவுக்கு வெரைட்டி காட்டும் அஜீத்
