சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்: எச்.ராஜா

சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா வியூகம்: எச்.ராஜா

raja

அகில இந்திய பா.ஜனதா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா நேற்று வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும், தர்மபுரியில் 2 சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா முதலிடத்தை பிடித்தது.

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 60 தொகுதிகளில் 2–வது இடத்தையும் பிடித்தது. எனவே பா.ஜனதாவுக்கு மிக அதிக செல்வாக்குள்ள அந்த 70 தொகுதிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக முதலில் கட்சி அமைப்பை பலப்படுத்துவது, பூத் கமிட்டிகளை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அதை தொடர்ந்து தொண்டர்கள் மக்களை சந்திப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் கட்சியின் பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.