என் தமிழ்

பினாங்கு இந்து மாணவர்களுக்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒத்துழைப்பு

பினாங்கு , 20 ஜூன் 2025 : பினாங்கு மாநில இந்து சங்கம் (MHSPSC) அலுவலகம், பிரையில், இந்து சமூக முன்னேற்றத்துக்காக நான்கு முக்கிய அமைப்புகள், ஒருங்கிணைந்த நோக்குடன், சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மிக மேம்பாட்டுக்காக கைகோர்த்தன.

MHSPSC மாநிலத் தலைவர் விவேக ரத்னா அ. தர்மன் PKT, PJK, PJM அவர்கள், பின்வரும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள்/பிரதிநிதிகளை சந்தித்தார்.

பினாங்கு தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், கெடா, பினாங்கு, பெர்லிஸ் மாநில இந்து அர்ச்சகர் சங்கம், மலேசியா தமிழ்ப்பள்ளி பழைய மாணவர் சங்கம் (பெர்தமா) – பினாங்கு கிளை ஆகிய அமைப்புகளின் இந்த ஒத்துழைப்பு, கல்வி மற்றும் ஆன்மிக துறையில் மாணவர்களை முன்னேற்றச் செய்யும் வழியில் மிக முக்கியமான படியாகும். சமூக சேவை, ஒருமை மற்றும் முன்னேற்றம் என்ற அடிப்படையில், இந்த அமைப்புகள் இணைந்து, எதிர்கால சந்ததிகளுக்காக உயர்ந்த பணிகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளன.

“இது வெறும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்துழைப்பு அல்ல — இது ஒரு நோக்கத்திற்கான ஒன்றிணைவு,” என திரு அ. தர்மன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்துழைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் முதல் கூட்டுச் செயற்பாடு விரைவில் அறிவிக்கப்படும்.

Scroll to Top