புரூணை தருஸ்ஸலாம், 20 ஜூன் 2025 : புரூணையில் நடைபெற்ற 12வது தென்கிழக்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், மலேசியா அணியினர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்கேற்று பல பதக்கங்களை கைப்பற்றி, நாட்டின் பெருமையை உயர்த்தினர்.
சீனியர் பெண்கள் – கத்தா (Individual Kata)
- தங்கம்– வியட்நாம்
- வெள்ளி – வியட்நாம்
- வெண்கலம் – லெவ்லி ஆன் (மலேசியா)
சீனியர் பெண்கள் – குமிடே (-50kg)
- தங்கம் – ஷாமளராணி சந்திரன் (மலேசியா)
- வெள்ளி – வியட்நாம்
- வெண்கலம்– கம்போடியா
சீனியர் ஆண்கள் – குமிடே (-55kg)
- தங்கம் – தேவேந்திரன் கல்யாண சுந்தரம் (மலேசியா)
- வெள்ளி – தாய்லாந்து
- வெண்கலம் – தாய்லாந்து, வியட்நாம்
சீனியர் ஆண்கள் – குமிடே (-60kg)
- தங்கம்– சூரிய சங்கர் ஹரி சங்கர் (மலேசியா)
- வெள்ளி – கம்போடியா
- வெண்கலம்– புரூணை, தாய்லாந்து
சீனியர் ஆண்கள் – குமிடே (-75kg)
- தங்கம்– வியட்நாம்
- வெள்ளி – இந்தோனேசியா
- வெண்கலம்– மெக்ராய்ஸ் டோனவன் டாகோல் (மலேசியா), வியட்நாம்
சீனியர் ஆண்கள் – குழு கட்டா (Team Kata)
- தங்கம் – வியட்நாம்
- வெள்ளி – இந்தோனேசியா
- வெண்கலம் – மலேசியா, வியட்நாம்
சீனியர் ஆண்கள் – குழு குமிடே (Team Kumite)
- தங்கம்- மலேசியா
- வெள்ளி – வியட்நாம்
- வெண்கலம் – கம்போடியா
இந்த போட்டியில் மலேசியா வீரர்கள் தங்களது திறமையையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தி, பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று தேசியக் கொடியை உயர்த்தினர்.
Photos Credit : AKF Asian Karate Federation












