என் தமிழ்

ஆசியான் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் வட்ட மேஜை மாநாடு 2025

புத்ராஜெயா, 19 ஜூன் 2025 : 2025-ஆம் ஆண்டிற்கான ஆசியான் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் சுற்ற மேசை மாநாடு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் மலேசியா கல்வி அமைச்சர் யபு. பத்லினா சிடேக், உயர் கல்வி அமைச்சர் யபு. டத்தோ’ ஸ்ரீ திராஜா டாக்டர் ஸாம்ப்ரி அப்து காதிர், ஆசியான் உறுப்புநாடுகள் மற்றும் தீமோர் லெஸ்தே நாட்டு பிரதிநிதிகள், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநாட்டின் போது, கல்வி அமைச்சர் யபு. பத்லினா சிடேக் தனது உரையில், கல்வியில் இருந்து விலகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் (OOSCY) (OOSCY – Out-of-School Children and Youth) பிரச்சனையை தீர்க்க, ஆசியான் நாடுகள் மத்தியிலும் தீவிர ஒத்துழைப்பு தேவை என வலியுறுத்தினார்.

அவரது கூற்றுப்படி, தரமான கல்வியை மேம்படுத்தும் முயற்சியில், ஒவ்வொரு நாட்டின் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்வது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.

இம்மாநாடு, OOSCY பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் மட்டுமின்றி, கல்வித் துறையின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்தும் நோக்கிலும், உறுப்புநாடுகளின் உறுதியை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும்.

Scroll to Top