என் தமிழ்

SK Putrajaya Presint 11(1) – உலகின் சிறந்த பள்ளி விருது 2025 இறுதிப் போட்டியில்!

புத்ராஜெயா, 19 ஜூன் 2025 : மலேசியாவின் கல்வித்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், புத்ராஜெயா பிரசண்ட 11(1) தேசிய ஆரம்ப பள்ளி (SK Putrajaya Presint 11(1)) உலகளாவிய அளவில் வழங்கப்படும் உலகின் மிக சிறந்த பள்ளி 2025 (World’s Best School Prizes 2025) விருதுக்கான இறுதிச் சுற்றுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த விருது, கல்வித் துறையில் சிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் நோக்கில் T4 Education என்ற அமைப்பினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான போட்டியில் SK Putrajaya Presint 11(1) “Menyokong Kehidupan Sihat” (ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவித்தல்) என்ற பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான தகுதிக்கு, பள்ளி மேற்கொண்ட பல முக்கியமான நடவடிக்கைகள் காரணமாகும். அவை:
* மாணவர்களின் உடல் நலத்திற்கான தினசரி உடற்பயிற்சி நடவடிக்கைகள்
* மனநல விழிப்புணர்வு மற்றும் உதவி செயல்பாடுகள்
*ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள் மற்றும் பசுமை திட்டங்கள்
* பள்ளி முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சிகள்

இந்த விருதுக்கு உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், SK Putrajaya Presint 11(1) இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவது, மலேசிய கல்வித் தரத்திற்கும், மாணவர்கள் நலனுக்காகக் களத்தில் செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஒரு முக்கிய அங்கீகாரமாகும்.

இந்த விருதுக்கான வெற்றியை உறுதி செய்ய, பொதுமக்களின் ஓட்டு (public voting) முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து மலேசியர்களும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த சிறந்த அங்கீகாரத்திற்கு, SK Putrajaya Presint 11(1) பள்ளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Scroll to Top