என் தமிழ்

தேசிய அளவிலான விளையாட்டு நிர்வாகக் கற்கைநெறி – நிலை 1 வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

கோத்தா பாரு, 19 ஜூன் 2025 : மாஜ்லிஸ் சுகான் நெகரி கெலந்தான் (Majlis Sukan Negeri Kelantan) மற்றும் மாஜ்லிஸ் சுகான் நெகாரா (Majlis Sukan Negara) இணைந்து நடத்திய தேசிய அளவிலான விளையாட்டு நிர்வாகக் கற்கைநெறி (Tahap 1), ஜூன் 16 முதல் 18 வரை கோத்தா பாருவில் உள்ள யயாசன் இஸ்லாம் கிளந்தான் (Kompleks Yayasan Islam Kelantan – YIK) வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கற்கைநெறியில் நாடு முழுவதிலும் இருந்து வந்த 42 பேர் பங்கேற்று விளையாட்டு நிர்வாகத் துறையில் தேவையான அடிப்படை அறிவு, திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புத் திறன்களை மேம்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவுவிழா, கிளந்தான் மாநில விளையாட்டு இயக்குநர் ஃபைசல் அப்துல்லா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.

இத்தகைய பயிற்சி வகுப்புகள் மாநில அளவில் திறமையான விளையாட்டு நிர்வாகிகளை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாகக் கருதப்படுகின்றன.

Scroll to Top