என் தமிழ்

மலேசியா வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்புத் துறை தூதுக்குழு – கோலாலம்பூர் கோபுரம் சுற்றுப் பயணம்

கோலாலம்பூர், 19 ஜூன் 2025 : மலேசியாவிற்கான உத்தியோகப்பூர்வ சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய கூட்டமைப்பின் தூதுக்குழுவினர், நாட்டின் முக்கிய ஐகானிக்கான சின்னங்களில் ஒன்றான கோலாலம்பூர் கோபுரத்துக்கு (Menara Kuala Lumpur) அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சுற்றுப் பயணம் மூலம், ரஷ்ய குழுவினர் 300 மீட்டருக்கு மேல் உயரமுள்ள இக்கோபுரத்திலிருந்து, கோலாலம்பூர் நகரத்தின் 360° அழகிய நகரக் காட்சிகளை காணும் வாய்ப்பு பெற்றனர். மேலும், மலேசியாவின் உயரமான கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இயற்கை பேரிடர்களின் போது மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் மேலாண்மை முறைகள் தொடர்பான கருத்துகள், அனுபவங்கள் ஆகியவை பகிரப்பட்டன.

தூதுக்குழுவினர், மலேசிய தலைநகரில் நடைபெறும் துரித வளர்ச்சி, அடிகட்டமைப்புகள் மற்றும் நகரப் பரந்தளவுகளையும் நேரில் பார்த்து, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் சவால்கள் மற்றும் மலேசிய அரசாங்கம் மேற்கொள்ளும் பாதுகாப்பு, பேரிடர் தயார் நடவடிக்கைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர்.

இந்த சுற்றுப்பயணம், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பேரிடர் மேலாண்மைத் துறையின் நுணுக்கங்கள், அனுபவமும் பரிமாறிக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக அமைந்தது. அத்தோடு மலேசியாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள KL கோபுரத்தையும் ரஷ்யக்குழுவினருக்குப் பரிச்சயப்படுத்தியது.

Scroll to Top