கோலாலம்பூர், 18/06/2025: 19வது தெற்காசிய நூலகர்களின் மாநாட்டை (CONSAL XIX), 17 ஜூன் காலை திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,“ஒரு மாடானி நாடு அறிவில் வேரூன்றி இருக்க வேண்டும்”என வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது, “பண்டைய அலெக்சாண்டிரியா நூலகம் முதல் பக்தாத் நகரத்தில் இருந்த ‘பைதுல் ஹிக்மா’ வரை, நூலகங்கள், பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் சேர்ந்து, நம் நாகரிகத்தின் இதயமாக இருக்க வேண்டும். எங்கு ஒரு மாபெரும் நாகரிகம் தோன்றியதோ, அங்கு அறிவும் அதன் அடித்தளமாக இருந்தது .”
அறிவின் பெருமையை பிரதமர் உம்பெர்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose’ நாவலும், கார்ல் ஸேகன் கூறிய “நூல்கள் தான் மனிதர்கள் மாயாஜாலம் செய்யக்கூடியவர்களென்ற நிரூபணங்கள்” என்ற மேற்கோள்களும் மேலும் எடுத்துக்காட்டின.
ஆனால், “இன்றைய உலகம் இரு வரிகளில் கருத்தை தீர்மானிக்கும், விரைவு மறுமொழி வேட்டையில் மூழ்கி வருகிறது. இது வாசிப்பு கலாசாரத்தையும் ஆழ்ந்த சிந்தனையையும் அழிக்கக்கூடிய நிலை,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால் வாசிப்பு மற்றும் சிந்தனை கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நூலகங்கள் மௌனத்துடன் கூடிய சிந்தனை இடமாக மட்டுமின்றி, புதுமையையும் விவாதத்தையும் ஊக்குவிக்கும் வாழும் வள இடமாக மாற வேண்டும் எனக் கூறினார்.
இங்கு புதுமைகள் அறிமுகம் செய்யும் நூலகர்களின் பங்கு முக்கியம் என்றும் அவர் பாராட்டினார். மலாயா பல்கலைக்கழகத்தின் பெடா லிம் மற்றும் துவான்பாஸா மற்றும் புத்தக சபையின் ரோஹானி ரூஸ்தாம் போன்ற நூலகர்களின் பங்களிப்பும் அவர் நினைவு கூர்ந்தார்.
அரசின் நூல் கொள்முதல் ஊக்கத் தொகைகள், மற்றும் டிஜிட்டல் நூலகங்களை விரிவாக்குவது என்பது தொடக்கத்திலேயே ஒரு சிறு படி என்றும், உண்மையான இலக்கு நூலகங்களை “அறிவின் உயிருள்ள தளமாக” மாற்றுவதே என்றும் அவர் தெரிவித்தார்.
“அங்கோர் வாட் முதல் போரோபுதூர், மலாக்கா சுல்தானரசு வரையிலான நம் பெருமைமிக்க நாகரிக மரபை இளம் தலைமுறைக்கு உணர்த்தும் பாலமாக நூலகம் இருக்க வேண்டும். நூலகர் அந்த மரபின் காப்பாளர்,”
என்றும் அவர் உரையை நிறைவு செய்தார்.
– பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்





