லங்காவி, கெடா, 18/06/2025 : ASEAN நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் அனைவரையும் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள #EduRoundtables2025மாநாட்டிற்காக வரவேற்கிறது மலேசியா.
இந்த ASEAN கல்வி வள மாநாடு 2025, 17 முதல் 20 ஜூன் வரை லங்காவி, கெடாவில் நடைபெறுகிறது.இம்மாநாடு தென்கிழக்கு ஆசியா வட்டாரத்தில் கல்வியை மேம்படுத்த உறுப்புநாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைகிறது.
மலேசியா கல்வி அமைச்சகம் (KPM), இந்த வட்டாரத்தின் எதிர்காலக் கல்விக்கான புதிய வழிநடத்தும் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், பள்ளிக்கூடம் மற்றும் உயர்கல்விகூடங்களில் இருந்து வெளியேறும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் (OOSCY) எண்ணிக்கையை குறைக்கும் செயல்திட்டங்கள் மீதான கவனமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது.





